59. அருள்மிகு ஆதிமூலநாதர் கோயில்
இறைவன் ஆதிமூலநாதர்
இறைவி மேகலாம்பிகை
தீர்த்தம் கொள்ளிடம்
தல விருட்சம் வில்வம்
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருப்பாற்றுறை, தமிழ்நாடு
வழிகாட்டி திருவானைக்காவலிலிருந்து திருவளர்ச்சோலை வழியாக கல்லணை செல்லும் பாதையில் உள்ள பனையபுரம் ஊரில் இறங்கி அங்கிருந்து கோயில் வளைவு வழியாகச் சுமார் 1லு கி.மீ. சென்று இத்தலத்தை அடையலாம். திருவெறும்பூர் இரயில் நிலையத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Thirupatrurai Gopuramமார்க்கண்டேய முனிவர் இப்பகுதிக்கு வந்தபோது சிவபூஜை செய்வதற்கு பால் கிடைக்காமல் வருந்தியபோது, சிவபெருமான் அங்கு பால் பெருகும்படி செய்து அருள்புரிந்தார். சிவபூஜைக்கு பால் சுரந்த இடமாதலால் இத்தலம் 'திருப்பாற்றுறை' (பால் + துறை) என்று அழைக்கப்படுகிறது.

மூலவர் 'ஆதிமூலநாதர்', 'பாற்றுறைநாதர்' என்னும் திருநாமங்களுடன், சிறிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பாள் 'மேகலாம்பிகை', 'நித்திய கல்யாணி' என்னும் திருநாமங்களுடன் சிறிய வடிவில் தரிசனம் தருகின்றாள்..

Thirupatrurai Praharamகோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமண்யர், மகாலட்சுமி, பைரவர், நவக்கிரகங்கள் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com